செய்திமுரசு

வக்சினே சரணம் ?

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. பைசர் வக்சினை கையாளும் பொறுப்பு ...

Read More »

ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்கவும்

இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  ஒக்டோபர்  2ஆம் திகதி வரை ந   நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம்  23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம். ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நீடித்தால்   10 ஆயிரம்  உயிர்களை காப்பாற்ற முடியும்  என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

Read More »

நெருங்கிப் பழகியவர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்

நியுசிலாந்தின்- ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபருடன், இலங்கையில் நெருங்கிப் பழகியவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (3) ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய  சந்தேகநபர்,  ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, அங்கிருந்த பலர் மீது கத்திக்குத்து தாக்குதலை முன்னடுத்த போது, ஆறு பேர் காயமடைந்தனர். எனினும் ...

Read More »

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி ஆதில்

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல் துறையால்   சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட ...

Read More »

எதிர்பார்த்ததற்கு முன்னரே இலக்கை அடைந்த விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 190 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 103 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும். விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 70 சதவீதமாகும். எதிர்பார்த்ததை விட இந்த இலக்கு முன்னதாகவே எட்டப்படுகிறது. இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவுத் தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்று Jobs Minister Martin Pakula கூறினார்..

Read More »

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல ...

Read More »

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

Read More »

வடக்கில் நேற்று 126 பேருக்கு கொவிட் தொற்று

புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 65 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவ மனையில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 பேர் தொற்றாளர்களாக ...

Read More »

அவசரகால சட்டம் மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள அதே நேரத்தில் அவசரகாலச் ...

Read More »

தொற்றுள்ளவர் எண்ணிக்கையில் NSW மீண்டும் உச்சம்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார். தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள். 63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

Read More »