நியுசிலாந்தின்- ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருடன், இலங்கையில் நெருங்கிப் பழகியவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (3) ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய சந்தேகநபர், ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, அங்கிருந்த பலர் மீது கத்திக்குத்து தாக்குதலை முன்னடுத்த போது, ஆறு பேர் காயமடைந்தனர்.
எனினும் நியுசிலாந்து காவல் துறையின் அதிரடி நடவடிக்கையில், சம்பவ இடத்திலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Eelamurasu Australia Online News Portal