நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார்.
தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள். 63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal