நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal