புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 65 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவ மனையில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ். போதனா மருத்துவமனையில் 12 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 5 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 4 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 4 பேர், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என 39 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
வவுனியா பொது மருத்துவமனையில் மூவரும் செட்டிகுளம் ஆதார மருத்துவ மனையில் இருவருமாக 5 பேர் வவுனியா மாவட்டத்திலும், மன்னார் பொது மருத்துவமனையில் 3 பேரும் முசலி மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருமாக ஐவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.