செய்திமுரசு

இந்தியாவுடன் மின்விநியோக கட்டமைப்பு …… இலங்கை மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே

*வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துபவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் அவர்களால் சித்தரிக்கப்படுவது போன்று பாரதூரமானவை அல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கினோம் * டீசலை விட திண்ம எல்என்ஜி பொருளாதார ரீதியாக அதிகநன்மையானது என்று உலகளா விய ரீதியில்வலுவான குரல் எழுந்துள்ளது. *இத்தகைய பின்னணியில், அமெரிக்கத் தூதரகம் எங்களுடன் செயற்பட்டு அதன் நிறுவனத்தினால் எல்என்ஜியை வழங்க முன்மொழிந்தது *மின் ஊழியர்கள் யாவரும் பயங்கரவாதிகள் அல்ல *உலகம் பசுமை சக்தியை தேர்வு செய்கிறது எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) விநியோகத்திற்கான அமெரிக்காவின் புதியபோர்ட்ரெஸ் எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியா ...

Read More »

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டியவுடன், அல்லது டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் pubகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும்.  அவசரகால சூழ்நிலைகள் அல்லது உயிர் போகும் சூழலில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு வழங்கப்படும். தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடைந்த பின்னர், குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் ...

Read More »

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் கல்வி போராளி மலாலா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார். பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து ...

Read More »

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

11 இளைஞர்களைக் கடத்தி கப்பம் கேட்டு காணாமல் ஆக்கியதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் நீக்கியதற்கு எதிராக காணாமல் போன வர்களின் பெற்றோர் உள்ளிட்ட இளைஞர்கள் குழு தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது. வழக்குத் தொடரவும் வாபஸ் பெறவும் சட்ட மா அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்தத் தீர்ப்பு ...

Read More »

சம்பளப் பிரச்சினையை தீர்க்க இணக்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை மூன்று தவணைகளில் வழங்காமல், ஒரே தடவையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள், இன்று (10) தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த முரண்பாடுகளை ஒரே தடவையில் தீர்த்து வைப்போம் என, தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். எங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான 160 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்த அவர், பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ...

Read More »

நம்பிக்கையைத் தகர்க்கும் செயலணி

வகுப்பறையில் மிகவும் குழப்படி செய்து கொண்டிருக்கின்ற மாணவனை, வகுப்புத் தலைவனாக அதாவது ‘மொனிட்டராக’ நியமிப்பது போல, ஒரே நாடு,  ஒரே சட்டம், அமைப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக, வெறுப்புணர்வின் வினையூக்கியான பொதுபல சேனாவின் செயலாளரான ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உவமானத்தை மக்கள் கூறுவதற்கு முன்பாகவே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரே கூறியிருக்கின்றார் என்பது கவனிப்பிற்குரியது. நமது முன்னோர்கள் இதனை வேறுவிதமாக வர்ணித்துச் சொல்வார்கள். ஒரே நாடு, ஒரே சட்டத்தை நிறுவுதல் என்பது, ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தேர்தல்கால வாக்குறுதியாகும். எனவே, அதனை ...

Read More »

வேதனையில் ஆஸ்திரேலிய குடும்பங்கள்

வரும் பிப்ரவரி 2022 வரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்குள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களோ ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களொ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனும் அறிவிப்பு குடும்பங்களை பிரிந்துள்ள ஆஸ்திரேலியர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90% சதவீதத்தை எட்டிய பின்னர் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அம்மாநிலத்தின் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.

Read More »

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார். அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் ...

Read More »

அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது சிதைக்கும் செயல்

மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கி பொதுத் தேசிய கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது அரசியலமைப்பை சிதைக்கும் செயலாகும் எனவே, கலந்துரையாடல்களின் பின்னர் முடிவு பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கலந்துகொள்வது அவசியம் என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று எமது நாட்டில் கூட்டணி அரசாங்கம் ஒன்றே உள்ளது. இக்கூட்டணி அரசாங்கத்துக்குள் பல கட்சிகள் ...

Read More »

சஹ்ரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியாவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி ...

Read More »