ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியாவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கினார்.
Eelamurasu Australia Online News Portal