குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டியவுடன், அல்லது டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் pubகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
  • தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும்.  அவசரகால சூழ்நிலைகள் அல்லது உயிர் போகும் சூழலில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு வழங்கப்படும்.
  • தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடைந்த பின்னர், குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டிய கட்டாயமில்லை.  இருந்தாலும், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
  • COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பர் என்றும், அவர்களுக்குத் தொற்றின் வெளிப்பாடு இலேசானதாக அல்லது மிகவும் குறைவானதாக இருக்கும் என்று Doherty Institute வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை சொல்கிறது.
  • Northern Territory பிரதேசத்தில் கட்டுப்பாடுகள் மூன்று கட்டங்களாக நீக்கப்படும்.  வீட்டிலேயே தனிமைப்படுத்தல் என்ற திட்டம் நவம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது.