வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

11 இளைஞர்களைக் கடத்தி கப்பம் கேட்டு காணாமல் ஆக்கியதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் நீக்கியதற்கு எதிராக காணாமல் போன வர்களின் பெற்றோர் உள்ளிட்ட இளைஞர்கள் குழு தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது.

வழக்குத் தொடரவும் வாபஸ் பெறவும் சட்ட மா அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.