இந்தியாவுடன் மின்விநியோக கட்டமைப்பு …… இலங்கை மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே

*வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துபவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் அவர்களால் சித்தரிக்கப்படுவது போன்று பாரதூரமானவை அல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கினோம்
* டீசலை விட திண்ம எல்என்ஜி பொருளாதார ரீதியாக அதிகநன்மையானது என்று உலகளா விய ரீதியில்வலுவான குரல் எழுந்துள்ளது.

*இத்தகைய பின்னணியில், அமெரிக்கத் தூதரகம் எங்களுடன் செயற்பட்டு அதன் நிறுவனத்தினால் எல்என்ஜியை வழங்க முன்மொழிந்தது

*மின் ஊழியர்கள் யாவரும் பயங்கரவாதிகள் அல்ல
*உலகம் பசுமை சக்தியை தேர்வு செய்கிறது

எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) விநியோகத்திற்கான அமெரிக்காவின் புதியபோர்ட்ரெஸ் எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்தியா மற்றும் சிங்கப்பூருடன்மின்விநியோக இணைப்புக்கான திட்டங்கள் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் அத்துடன் தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் .

பேட்டி வருமாறு ;

கேள்வி; மின்சாரத்துறை தொழிற்சங்கங்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் செய்தன. வேலைநிறுத்தம் செய்யப்போவதாக சூளுரைத்துள்ளனர் .இத்தகைய சூழ்நிலையில் மின்வெட்டு அல்லது மின்தடை ஏற்படும் என பொது மக்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பாக நீங்கள் எவ்வளவுக்கு தயாராக இருக்கிறீர்கள்?

பதில்;உண்மையில், அவர்கள் ஆரம்பத்தில் 76 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு செல்வதாக தெரிவித்தனர்.. ஜெனரேட்டரை இயக்குவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக மிரட்டினர். நாங்கள் பதறவில்லை. இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள், ஏனைய பொறியியலாளர்கள், மின்சார அத்தியட்சர்கள், மீட்டர்வாசிப்பவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் பேச்சு நடத்தினோம். வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துபவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் சித்தரிக்கப்படுவது போல் தீவிரமானவை அல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கினோம்.

மின்சாரசபை ஸ்தாபிக்கப்பட்டதும் அந்த நிறுவனம் ஆரம்பத்தில் ஒரு திணைக்களமாக செயற் படத் தொடங்கியதும் அது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏகபோக உரிமையை அனுபவித்தது. இருப்பினும், 1990 களில், அனல் மின் நிலையங்களை இயக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில்மின்சாரசபை அவர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது.

தற்போது எம்பிலிப்பிட்டிய, மாத்தறை, சபுகஸ்கந்த போன்ற பல்வேறு பகுதிகளில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே லக்தனவி சக்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

இது யுகதானவி மின் உற்பத்தி நிலையத்தை துவக்கியது. அதற்கு அரசு ஊக்கம் அளித்தது.லெக் கோ [LECO ]நிறுவனம், ஊழியர் பணி நிதியம், ஊழியர் சேமலாப நிதியம்ஆகியவை இதில் முதலீடு செய்தன. இது ஆரம்ப மூலதனத்தில் 30% ஆகும். நிறுவனம் மீதித்தொகைக்கு கடனைத் திரட்டியது. அதுஎச் எஸ் பி சி வங்கியில் இருந்து வந்தது. அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் மட்டுமே கடனை விடுவிக்க வங்கி ஒப்புக்கொண்டது.

ஒரு நிறுவனத்திடம் 50% உரிமம் இருந்தால் ஒழிய அரசாங்கம் அதில் கையெழுத்திட முடியாது. நிதி அமைச்சு முதலீடு செய்து கையெழுத்திட்டது;அதன் விளைவாக உத்தரவாதம் அளிக்கிறது.

இது ஏனைய வற்றிலிருந்து தனித்துவமான ஒருவர்த்தக நடவடிக்கையாகும். இது 2036ல் அரசிடம் ஒப்படைக்கப்படும். இது டீசல் சக்தியுடன் செயற் படத் தொடங்கியது. இதற்கிடையில், டீசல் வலுவை விட திண்ம எல்என்ஜி பொருளாதார ரீதியாக அதிக இ லாபம் ஈட்டக்கூடியது என்று உலகளாவிய ரீதியில் குரல் எழுப்பப்பட்டது.. 2000 ஆம் ஆண்டு முதல் எல்என்ஜி எரிசக்திக்கு செல்வதற்கான எண்ணப்பாட்டை நாங்கள் கொடுத்துள் ளோம் . சில சமயங்களில் பேச்சுவார்த்தை நடத்திகேள்வி மனு கோரினோம். முன்னையநல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு கூட்டு முயற்சிக்கான பேச்சுக்கள் இருந்தன. ஆனால், அதுகளத்தில் நடைமுறைக்கு வரவில்லை .

இப்போது, நாங்கள்கேள்வி மனுக்கோரலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் – ஒன்று இலங்கைக்கு எல்என்ஜி வழங்குவதற்கும், பின்னர் அவற்றை சேகரித்து வைத்து அங்கிருந்து உ லைக்கு குழாய்கள் மூலம் அனுப்புவதற்கும்மனுக்கோரல் மேற்கொள்ளப்பட்டது.. செயற் பாட்டில், அரசாங்கம் குறைந்த விலையில் எல்என்ஜி விநியோகஸ்தர்களை ஆராய்ந்தது. உலகமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது. அதை எதிர்கொள்ள நாம் எ ம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், உலகளாவிய யதார்த்தங்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது. உதாரணமாக, சீனாவும் எ ம்மை விட பெரிய நாடாக இருந்தாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அங்கு குறிப்பிட்ட நாட்களில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் பங்கீட்டில் எரிபொருள் வழங்கப்படுகிறது. நாம் அத்தகைய நெருக்கடியைத் தவிர்த்தோம். இத்தகைய பின்னணியில், அமெரிக்க தூதரகம் எங்களை ஈடுபடுத்தி, எல் என் ஜி யை வழங்க அதன் நிறுவனத்தை முன்மொழிந்தது

கேள் வி; கேள்விமனுக்கோரல் செயல்முறையில் பங்கேற்காத ஒரு நிறுவனம் ஐந்து ஆண்டுகளாக எல்என்ஜி விநியோகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை உள்ளது. நீங்கள் என்ன கூற வேண்டியுள்ளது ?

பதில்;அது உண்மை. அமெரிக்க நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு அலகுக்கு[யூனிட்] 1 அமெரிக்க டொ லர்களை விட சற்று அதிகமாக எல்என்ஜி வழங்க வேண்டும்.கேள்விமனுக்கோரல் செயல்முறை மூலம் அடையாளம் காணப்பட்ட நிறுவனம் ஒருஅலகை 3.50 அமெரிக்க டொ லர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டது.

பின்னர், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மலிவான விலைக்கு செல்ல வேண்டும். எதிர்காலத்தில் மின் உற்பத்தியில் இந்த நிறுவனம்எ ம் மீது செல்வாக்கு செலுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

இருப்பினும், மின்சார விநியோகத்தைஇலங்கை மின்சாரசபை கட்டுப்படுத்துகிறது. நீர் மின்சாரம், விநியோகத்தில் 45-50 சதவீதம் ஆகும். வெறும் ஐந்து சதவீத மின்சா ரத்தை கொண்ட அமெரிக்க நிறுவனம் எ ம் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்பது தவறான கருத்து. தற்போதைய எதிர்ப்புப் பிரசாரம் வெறும் அரச விரோதச் செயல். சீன தொழில்நுட்ப அதிகாரிகள் மட்டுமே நுரைச் சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை இயக்குகின்றனர்.

இதனால் மின்சார விநியோகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதா? சீனா மின் விநியோகத்தில் இருந்து விலகினால், 900 மெகாவாட் மின்சாரத்தை இழக்க நேரிடும். ஒரு வெற்று வாதம் இந்த சக்திகளால் தூண்டிவிடப்படுகிறது. அனல் மின் துறையில் உள்ள நிறுவனங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பது முற்றிலும்பிரயாசனம ற்ற து .

அரசு சாரா அமைப்புகளால் நிதியுதவி பெறும் அரச விரோத சக்திகளால் பொய்கள் பரப்பப்படுவதை நாங்கள் காண்கிறோம். அதுதான். ஜே.வி.பி மின்துறையில் வேலைநிறுத்தத்திற்கான அழைப்பில் தனித்து நின்றது. தொழிற்சங்க கூட்டணியின்ஏற்பாட் டாளர் – ஜேவிபி மற்றும் எஸ்ஜேபி ஆகியவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் – ஜேவிபி உறுப்பினர்.

அவர் இன்று தனியாக குரல்கொடுக்கிறார் . கடைசியாக, மின் வினியோகத்தை சீர்குலைக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படித்தான் கடைசியில் ஒரு அடி பின்வாங்கினார்கள்.

கேள்வி; நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது புவிசார் அரசியல் சூழலில் எரிசக்தி பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் என்ற முறையில் இது குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில் ;எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் அரச -தனியார் கூட்டு முயற்சிகளுக்கு செல்கிறோம் என்பது தெளிவாக உள்ளது. அதன்படி செயற் படுகிறோம். 70 சதவிகிதம் மீளப் புதுப்பிக்கத்தக்க சக்தியை சார்ந்து இருப்போம் என்று உறுதியளிக்கிறோம். சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்ய தனியாரிடம் கேள்விமனு கோரியுள்ளோம். 50 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். பத்திரிகையில் விளம்பரம் போட்டுள்ளோம். சியம்பலாண்டுவ, மன்னார், சம்பூர் போன்ற பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உத்தேசித்துள்ளோம். இந்த முறையில் 30,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். 2045 ஆம் ஆண்டு எமது நுரை ச்சோலை மின் உற்பத்தி நிலையம்செயற்படாமல் விடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 2030 ஆம் ஆண்டளவில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகளை மூடுவோம்.

கேள்வி;போர்ட்ரெஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ரத்து செய்யாது என்று கூறுகிறீர்களா?

பதில்;எமது யுகதனவியின் பங்குகளை நாங்கள் வேறுபடுத்தி மாற்றிவிட்டோம். அமெரிக்க நிறுவனம் விரும்பினால், அதை மீண்டும் இந்திய நிறுவனத்திற்கு மீள விற்பனை செய்யலாம். அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமை உண்டு. ஆனால், 60 சதவீத உரிமையைக் கொண்ட எங்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அதனைக் கட்டுப்படுத்த முடியும். நிதியமைச்சால் புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்படும். அமெரிக்க நிறுவனம்விநியோகஸ்தர் என்றாலும் எல் என் ஜி விநியோகத்தை அது பொறுப்பேற்றுக்கொள்ளும். நிலக்கரி மின் நிலையத்தை நிறுவியதில், நிலக்கரி கொள்முதல் மற்றும் விநியோகத்திற்காக தனி நிறுவனத்தை உருவாக்கினோம்.

கேள்வி: ஊடகவியலாளர் சந்திப்பில், ஜே.வி.பி. எதிர்காலத்தில் ஏதேனும்மின்தடை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு என்று கூறியது. இத்தகைய மின்தடையை அரசால் தடுக்க முடியுமா?

பதில்;அனைத்து மின் ஊழியர்களும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள். இந்தநடவடிக்கையில் , அவர்களுக்கு முறையாகஅறிவூட்டியுளோம் . இந்த ஒப்பந்தம் மின்சார சபைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மின்சார சபையை தனியார் மயமாக்குவது இல்லை. மின் ஊழியர்களும் மின் நுகர்வோர்தான். ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அது அவர்களையும் பாதிக்கும். அவர்களும் உணர்ந்தார்கள். நவம்பர் 3 ஆம் திகதி மின்சார விநியோகத்தை சீர்குலைப்பதாக ஜே.வி.பி அச்சுறுத்தியது. ஆனால், ஜே.வி.பி இன்று தனிமைப்படுத்தப்பட்ட குழுவாக உள்ளது. நாட்டை அழிக்கும் எந்த செயலையும் மக்களும், அரசு ஊழியர்களும் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனசாட்சியுடன் களத்தில் உள்ளயதார்த்தங்களை சரியான முறையில் புரிந்துகொண்டு செயற் படுகிறார்கள்.

கேள்வி;இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு வருகைதந்து மன்னாருக்கு விஜயம் செய்தார். மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. நீங்கள் எடுத்த விசேடமான தீர்மானங்கள் என்ன ?

பதில் ;இந்தியாவிற்கு மின்சாரம் வழங்குவதற்காக கடலுக்கடியில் பரிவர்த்தனை கேபிள்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய எதிர்பார்க்கிறோம். சிங்கப்பூருக்கு மின் சக்தி யை வழங்க முடியுமா என்பதை நாங்கள் ஆராய்வோம். ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை நடத்தினோம். எங்களுக்கு பாரிய முதலீடுகள் தேவை. காற்றாலை மின்சாரத்தைபிறப்பித்தால் ஏனைய நாடுகளுக்கு விற்று அந்நிய செலாவணியை சம்பாதிக்கலாம். சூரிய மின் சக்தி தீர்வுகளை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது மிகவும் விலைகூடியது.இன்னும், நாங்கள் அதைஆராய்ந்து வருகிறோம். உலகம் பசுமை சக்தியை தேர்வு செய்கிறது. ஸ்கொ ட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி; இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சாத்தியமான மின்விநியோக இணைப்பு பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். புவிசார் அரசியல் சூழலில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

கேள்வி;இன்று, மின் உற்பத்திசெய்வதற்கு , தண்ணீர் மட்டுமே இலவசமாக கிடைக்கிறது. அது நீர் மின் உற்பத்திக்காக. நாட்டின் மொத்தத் தேவையையும் நீர் மின்சாரம் மூலம் பூர்த்தி செய்ய முடியாது. அதனால்தான் அனல் மின்சாரத்தை நம்பியிருக்கிறோம்.இது விலை உயர்ந்தது. ஒரு அலகு[ யூனிட்] ரூ.23-30 வரைசெலவாகிறது . ஆனாலும்அதனை , 16 ரூபாவுக்கு விற்கிறோம் இதுவே இலங்கை மின்சாரசபையின் பாரிய இழப்புகளுக்குக் காரணம். ஒருபுறம், நஷ்டத்தைக் குறைத்துஇ லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். மறுபுறம், அதை வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம்.

கேள்வி;இலங்கை எரிவாயுபடிவுகளை கண்டுபிடித்துள்ளது. ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் விநியோகத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றிருக்கும் பட்சத்தில், எ மது சக்தி தேவைகளுக்கு அவற்றை ப் பயன்படுத்துவதற்கான திட்டம் என்ன?

பதில்;1990 களில் எரிவாயு படிவுகளை ப் பற்றி எங்களுக்கு யோசனைகள் இருந்தன. அத்தகைய வளங்களை ஆய்வு செய்ய நிறுவனங்களிடம்கேள்விமனு கோரி அப்போதைய அரசாங்கம் அந்த நேரத்தில் ஒரு பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டது. இரண்டு நிறுவனங்கள் மட்டுமேகேள்விமனு கோ ரல்களை வி டுத்தன. அதில் ஒன்று நோர்வே நிறுவனம். ஒரு நோ ர்வே நாட்டுக் கப்பல் எரிவாயு மற்றும் எண்ணெய் படிமம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டது. மன்னார்குடாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மன்னார் குடாவில் இரண்டு பகுதிகளில் ல் முப்பது எண்ணெய்க் கிணறுகள் காணப்பட்டன. முதலீடு செய்ய விரும்பும் எந்தவொரு நிறுவனமும் நோர்வே நிறுவனத்திடமிருந்து தரவை வாங்க வேண்டும். நோ ர்வே நிறுவனம், தொழில்துறையின் மேம்பாட்டிற்காக உலகின் முன்னணி நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர், இலங்கை அரசாங்கம் அத்தகைய தரவுகளை வாங்கியது. எங்களிடம் எரிவாயுபடிமம் உள்ளது. அவற்றைப் பிரித்தெடுப்பது வணிக ரீதியாக சாத்தியமா என்பதுதொடர்பாக எங்களுக்கு இன்னும்பிரச்சினை உள்ளது.

சொந்தமாகச் செய்வதற்கு எங்களிடம் நிதிவளம் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் உள்ள நாடுகளின் ஆதரவை நாம் பெற வேண்டும். கடலுக்கு அடியில் 3000 அடிக்குக் கீழே எரிவாயு கிடைப்பதால் எரிவாயு எடுப்பது எளிதான காரியம் அல்ல. எரிவாயு எடுப்பதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும். எரிவாயு வளங்களைப் பாதுகாத்தால், அவற்றை வர்த்தகம் செய்வதற்கு ஒரு திட்டம் தேவை. நாம் ஒரு திட்டத்துடன் அதைச் செய்யாவிட்டால் அது பேரழிவாகவே இருக்கும். நைஜீரியா போன்ற நாடாக எ மது நாடும் மாறும். நைஜீரியா வளமானது, ஆனால் மக்கள் ஏழைகள். முஹம்மது கடாபியின் கீழ் லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் எண்ணெய் வளம் கொண்ட வெற்றிகரமான நாடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். எரிவாயுவைக் கண்டுபிடிக்கும் வரை நாட்டை நிர்வகிக்க வேண்டும். குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டிய தேவை உள்ள து .

கேள்வி ; இலங்கையில் பிரித்தெடுக்கப்படும் எல்என்ஜியைப் பயன்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தமா ?

பதில் ;ஆம். இல்லையேல் நாட்டை நிர்வகிக்க முடியாது. புதிதாகக் கிடைத்த செல்வத்தை பயன்படுத்துவதற்கான திட்டம் இல்லாமல் அதிர்ஷ்ட லாப சீட்டுல் மூலம் ஒருவர் அதிக தொகையைபெற்றிருந்தால் அவர் பைத்தியமாகிவிடுவார். எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கேள்வி; கொஞ்சம் விலகி , சில அரசியல் விட யங்களைபற்றி உங்களுடன்கலந்துரையாட வி ரும்புகிறேன் கட்சியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பிரதமர் மகி ந்த ராஜபக்ச பேசுகையில், அரசியல் ரீதியாக கட்சி மக்களுடன் ஈடுபட்டிராத காரணத்தினால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் கட்டுப்பாடில்லாமல் போனதுஎன்று குறிப்பிட்டிருந்தார்.. பிரதமரின் இத்தகைய கருத்துக்களுடன்சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

பதில்;அ து உண்மை. நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் போது நாங்கள் 24 மணி நேரமும் அமைச்சுக்கு உறுதியளிக்கப்படுகிறோம். விவசாயிகளின் போராட்டத்தைப் பொறுத்த வரையில் இயற்கை விவசாயத்தை ஏன் அறிமுகப்படுத்தினோம் என்பது குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. நம் நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தேவை. சிறுநீரக நோயாளிகளுக்கென பிரத்யேக மருத்துவமனையை ஏன் அமைத்துள்ளோம்? எங்களுக்கு கொழும்பில் கண் மருத்துவமனை உள்ளது. ஏனென்றால்,எ ம்மிடம் ஏராளமான கண் நோயாளிகள் குணமடைய வேண்டும். எங்களிடம் சிறுநீரக நோயாளிகளுக்காக பிரத்யேக மருத்துவமனை உள்ளது. அதற்குக் காரணம், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.

சிறுநீரக செயலிழப்பு என்பது விவசாய இரசாயனங்களின் வெளிப்பாட்டால் ஏற்படும் நோய் என்று நம்பப்படுகிறது. , எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர். இதுபோன்ற உடல்நலக் கேடுகளுக்கு தீர்வு காண வேண்டும். தாழ்ந்த மட்ட அளவில் விழிப்புணர்வு இல்லை என்று நினைக்கிறேன். கசிப்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். டாக்டர்கள் அவர்களை எச்சரிக்கின்றனர். ஆனால், அதற்கு அடிமையாகி குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கெட்ட பழக்கத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவது கடினமான வேலை.

ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைப் பொறுத்தவரை, தலா 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை களைத் திறப்பது குறித்து முடிவெடுத்து அவர்களை ஈடுபடுத்தினோம்.

கேள் வி; உங்கள் தேர்தல் அறிக்கையில், பத்து ஆண்டுகளில் இயற்கை விவசாயத்தை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள் . இதை ஒரேநாளில் இந்த மாதிரியாக அறிமுகப்படுத்த முடியுமா?

பதில்;உங்கள் கேள்வி பொருத்தமானது. விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகே அதைச் செய்திருக்க வேண்டும். இப்போது, நாம் திரும்பிச் செல்ல முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதி சந்தைகளுக்கு அலங்கார செடிகளை வளர்ப்பதில்இ ரசாயனங்களை பயன்படுத்த அனுமதித்துள்ளோம். இந்தத் தடையில் இருந்து தேயிலைத் தொழிலுக்கு விலக்கு அளித்துள்ளோம். சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க உற்பத்தி செய்யப்படும் சேதன உரத்தை கொண்டு தேயிலையை பயிரிட்டால், எ மது பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

கே ள் வி;மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பெ ப்ரவரிக்குப் பிறகு உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்தலுக்குச் செல்வீர்களா?

பதில்; இது ஏன் நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். இது அரசாங்கத்தின் தவறு அல்ல. எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட கோவிட் நோயால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதன் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. வளரும் நாடுகளில் எங்கள் தடுப்பூசி நடவடிக்கை சிறந்த ஒன்றாகும்.களத்தில் பெறுபேறுகளை காண்கிறோம். அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரத்தின் பின்னணியில் வெளிநாட்டு நிதியுதவி பெறும்அரசசார்ப்பற்ற தொண்டு நிறுவனங்கள் உள்ளன. தொற்றுநோயால் கூட இந்த நாடு அழிக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். சமீபத்தில்,சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் நாம் ஆச்சரியப்பட மாட்டோம்.