செய்திமுரசு

கேள்விக்குச் சரியாகப் பதிலளித்தசிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

கடையிலிருந்து 5 வினாடியில் எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையின் (Offers)  கீழ் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிறுவன் ஒருவன் அள்ளிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிகாவில்  பல்பொருள் அங்காடியொன்றில் சிப்ஸ் பக்கெட் வாங்க வந்த சிறுவனிடம் கௌண்டரில் நின்ற நபர், கணித கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு பரிசாக 5 வினாடியில் கடையிலிருந்து எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையை அவர் அளித்தார். இதன் மூலம், உணவுப்பொருட்கள், அப்பிள் ஏர்போட்கள் உள்ளிட்டவைற்றை எடுத்து சிறுவன் ...

Read More »

கூட்டமைப்பின் செயலாளராக மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளார். யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் இது உட்பட அதிரடியான மாற்றங்கள் சிலவற்றை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தினக்குரலுக்குத் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ...

Read More »

இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள தாக்கம் வீரியமானது!

இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அ​ந்த வைரஸ், தொற்றுநோயை பரப்பும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொவிட் – 19 வைரஸில், ‘B.1.42‘ எனும் ரகத்தைச் சேர்ந்த மிகவும் வீரியம் கொண்ட வைரஸாகும் என்பது இனங்காணப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே என்பவரினால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் ஏற்கெனவே இனங்காணப்பட்ட கொத்தணி வைரஸ்கள் B.1, B.2, B 1.1 ...

Read More »

முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள்?

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே ஆங்காங்கே விமர்சனங்களை காணக்கூடியதாக இருக்கிறது “முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார். முகநூலில் முஸ்லிம் நண்பர்கள் தமது பிரதிநிதிகளைக் கடுமையாகத் திட்டி எழுதும் ஒரு நிலைமையை காணக்கூடியதாக இருக்கிறது. ...

Read More »

ஆஸ்திரேலியா வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும்!

ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டமான அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் ஆஸ்திரேலிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு மூலம். அந்நாட்டில் பலர் மக்கள் தொகை பெருக்கத்தை விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. எங்கள் கருத்துக்கணிப்புகள் மூலமும் பிற கருத்துக்கணிப்புகள் மூலமும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், வெளிநாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் ...

Read More »

நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க பெருமளவான மக்கள் வாக்களிப்பு!

குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின. இந்த முடிவுகளில் 65.2 வீதமானமை 2019ஆம் ஆண்டின் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான தெரிவுச்சட்டத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் புதிய சட்டமாகி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ...

Read More »

இராணுவ பயிற்சியில் ஆர்மேனியா பிரதமரின் மனைவி அன்னா ஹகோபியான்!

வடமேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியாவுக்கும் (Armenia), அஸர்பைஜானுக்குமிடையே (Azerbaijan)  நாகோர்னோ-காராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் (Nikol Pashinyan) மனைவி அன்னா ஹகோபியான் (Anna Hakobyan) இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ள அன்னா, பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும்,  ஆர்மீனியா இராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ...

Read More »

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிந்த பெண் மரணம்

கொரோனாவால் மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது பெண் நோயாளியே உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

திருமணம் நடத்துவது குறித்து அஜித் ரோகண தெரிவித்தது என்ன?

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படாத பகுதிகளில் சுகா தார ஆலோசனைப் படி திருமணங்களை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் திருமண வைபவங்களைச் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை படி நடத்தலாம் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். திருமண வைபவங்களில் பங்கேற்பாளர்களின் எண் ணிக்கையை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு ...

Read More »

பொம்பியோவின் ஓட்டமும் சீனாவினது சீற்றமும்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது. வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ் வொசிங்டன் மட்டும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க. ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் ஒரு வித்தியாசமான பாத்திரம் அவரைக் கோமளி என்று அழைப்பதா வம்பன் என்று அழைப்பதா என்று எமக்குத் தெரியாது. ...

Read More »