இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த வைரஸ், தொற்றுநோயை பரப்பும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் கொவிட் – 19 வைரஸில், ‘B.1.42‘ எனும் ரகத்தைச் சேர்ந்த மிகவும் வீரியம் கொண்ட வைரஸாகும் என்பது இனங்காணப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே என்பவரினால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் ஏற்கெனவே இனங்காணப்பட்ட கொத்தணி வைரஸ்கள் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 எனும் ரகங்களைச் சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் பரவலை ஏற்படுத்திய வைரஸ் வகையை விட இந்த வைரஸ் வகைகள் மிக வேகமாக மனிதர்களுக்கிடையில் பரவும் வல்லமையை கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal