வடமேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியாவுக்கும் (Armenia), அஸர்பைஜானுக்குமிடையே (Azerbaijan) நாகோர்னோ-காராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் (Nikol Pashinyan) மனைவி அன்னா ஹகோபியான் (Anna Hakobyan) இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ள அன்னா, பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஆர்மீனியா இராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், தமது நாட்டை ஒருபோதும் எதிரிகளிடம் விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் பதிவிட்டுள்ளார்.