குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின. இந்த முடிவுகளில் 65.2 வீதமானமை 2019ஆம் ஆண்டின் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான தெரிவுச்சட்டத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் புதிய சட்டமாகி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கும் குறைவான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மருத்துவர்கள் ஒப்புதல் அளித்தால் உதவி இறப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை இந்த சட்டம் அனுமதிக்கும்.
அதன் எதிர்ப்பாளர்கள் சட்டத்தில் போதுமான பாதுகாப்புகள் இல்லை என்று கூறுகிறார்கள்.