திருமணம் நடத்துவது குறித்து அஜித் ரோகண தெரிவித்தது என்ன?

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படாத பகுதிகளில் சுகா தார ஆலோசனைப் படி திருமணங்களை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் திருமண வைபவங்களைச் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை படி நடத்தலாம் என காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்களில் பங்கேற்பாளர்களின் எண் ணிக்கையை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு கொள்ளுபிட்டியில் நேற்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி இடம்பெற்ற திருமணத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத் தப்பட்ட சட்டங்களை மீறி 35 பேர் பங்கேற்று திருமணத்தை நடத்தியதற்காகத் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத் தின் கீழ் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.