கடையிலிருந்து 5 வினாடியில் எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையின் (Offers) கீழ் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிறுவன் ஒருவன் அள்ளிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிகாவில் பல்பொருள் அங்காடியொன்றில் சிப்ஸ் பக்கெட் வாங்க வந்த சிறுவனிடம் கௌண்டரில் நின்ற நபர், கணித கேள்வி ஒன்றை கேட்டார்.
அதற்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு பரிசாக 5 வினாடியில் கடையிலிருந்து எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையை அவர் அளித்தார்.
இதன் மூலம், உணவுப்பொருட்கள், அப்பிள் ஏர்போட்கள் உள்ளிட்டவைற்றை எடுத்து சிறுவன் தனதாக்கிக் கொண்டான்.