செய்திமுரசு

பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு ...

Read More »

காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா?

சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ...

Read More »

மாவீரர்களின்தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம்

கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையின் போது சிங்கள எம்.பி.க்கள் பலர் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு; “தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து ...

Read More »

கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை ...

Read More »

9 கொரோனா மரணங்கள் இன்று பதிவு – மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வு

இலங்கையில்  ஒரே நாளில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளது இதுதான் முதன் முறையாகும்.

Read More »

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த குழு இது குறித்து ஆராய்ந்துள்ளது. அரசாங்கம் நியமித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என்பது அவர்களின் கருத்தாக உள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியில் மிக வேகமாகப் பரவும் கொரோனா!

தெற்கு அவுஸ்திரேலியாவில்  கொரோனாத் தொற்றுப்  பரவலைத்  தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் (Adelaide) மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து அங்கு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு  பாடசாலைகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி ...

Read More »

ஆஸ்திரேலிய படை வீரர்கள் மீது நடவடிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், 39 பேரை ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் கொன்றது போர்க்குற்றம் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், 39 பேரை ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் கொன்றது போர்க்குற்றம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி விமானங்களை மோதி கொடூர ...

Read More »

முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் 560 பேரை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. ...

Read More »

செயற்கைசுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத நிலை!

ஜனாதிபதி- நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்த அரசாங்கம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்பட்ட சாதகமான விடயங்கள் எவையும் வரவுசெலவுதிட்டத்தில் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு வழங்கப்படவேண்டிய செயற்கை சுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத பொதுமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். பொய்கள் ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் தனது இலக்குகளை அடைகின்றது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது, மூன்றில் இரண்டை பெற்றுள்ளது 20வது திருத்தத்தை நிறைவேற்றி இரட்டை பிரஜாவுரிமை குறித்த தனது பிரச்சினைக்கு ...

Read More »