செய்திமுரசு

புதிய 4 இந்திய மொழிகள் உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை

இந்தியாவில் தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை தனது சேவைகளைத் தொடங்குகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் ...

Read More »

சிறீலங்காவில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன! -ஐ.நா

சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ‘கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு முறையிட்டுள்ளன. 2012இலிருந்து 2016ஒக்ரோபர் வரையான காலப்பகதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் கடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ...

Read More »

நெல்சிப் ஊழல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டிருந்ததா?

வடமாகாணசபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கையினை சுமார் ஒருவருட காலம் மறைத்து வைத்திருந்து தற்போதே அதனை வெளியிட்டமை அம்பலமாகியுள்ளது. நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவரை கொண்ட குழுவொன்று 2015ம் ஆண்டின் பெப்ரவரி நியமிக்கப்பட்டிருந்த போதும் அதன் அறிக்கை அதே ஆண்டின் நவம்பர் மாதம் வடமாகாணசபை வசம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இந்நிலையில் நெல்சிப் ஊழல்கள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை ஆளுநரிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கையும் கிடைக்கப்பெற்று ஒருவருடம் ...

Read More »

இடம் நகர்கின்றது அவுஸ்திரேலியக் கண்டம்

தற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என்பது புவியியலாளர்களின் கருத்து. எனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது. இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியக் கண்டம் தொடர்ந்தும் தனது இடத்தை விட்டு நகர்ந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக் கண்டமானது ஆண்டு தோறும் பல மில்லி மீற்றர்கள் வரை புவியின் மத்திய பகுதியில் இருந்து நகர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓர் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நகர்வை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை கடந்த 22 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு?

இந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றாலும் மக்கள் பணத்தை மாற்ற திண்டாடுகின்றனர். இதேபோன்று அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை ...

Read More »

சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது காஷ்மீர் சிறுமி

இத்தாலியில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது சிறுமி தஜாமுல் இஸ்லாம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள அண்ட்ரியா நகரில் நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்தார். 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் உலகம் முழுவதும் 90 நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் 6 போட்டிகளில் வென்ற தஜாமுல் இறுதியாக ...

Read More »

அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம்

அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என தென் ஆப்பிரிக்கா அணியின் கப்டன் டுபெலிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா  கப்டன் டுபெலிசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More »

அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள்

லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே ஸ்வீடனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்சே மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், அவர் கைது ...

Read More »

70 ஆண்டுக்குப் பிறகு வானில் நிகழும் ‘சூப்பர் நிலவு’

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ ஸ்‌பெயின் நாட்டில் தெரிய தொடங்கியுள்ள்து. பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பதை அறிவியல் வல்லுநர்கள் ‘சூப்பர் நிலவு’ என அழைக்கிறார்கள். இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1948 ஆம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் இன்று மீண்டும் தோன்றி உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. ...

Read More »

எகிப்து கல்லறையில் 2500 வயது மம்மி கண்டுபிடிப்பு

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வண்ணமயமான மம்மி, எகிப்து நாட்டின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. ...

Read More »