சிறீலங்காவில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன! -ஐ.நா

சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு முறையிட்டுள்ளன.

2012இலிருந்து 2016ஒக்ரோபர் வரையான காலப்பகதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் கடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா குழுவின் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிராக ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பான மீளாய்வு ஆரம்பமாகியது. இம்மீளாய்வு தொடர்ந்து நடைபெறவுள்ளது.