தற்போது உள்ள ஏழு கண்டங்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து காணப்பட்டன என்பது புவியியலாளர்களின் கருத்து.
எனினும் காலநிலை மாற்றங்கள் காரணமாக பின்னர் அவை தனித்தனியாக பிரிந்ததாக கருதப்படுகின்றது.
இப்படியிருக்கையில் அவுஸ்திரேலியக் கண்டம் தொடர்ந்தும் தனது இடத்தை விட்டு நகர்ந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இக் கண்டமானது ஆண்டு தோறும் பல மில்லி மீற்றர்கள் வரை புவியின் மத்திய பகுதியில் இருந்து நகர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓர் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நகர்வை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை கடந்த 22 வருடங்களில் அவுஸ்திரேலியக் கண்டமானது 1.5 மீற்றர் நகர்ந்திருந்தமை இவ்வருட ஆரம்பத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அக் கண்டத்தின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றினையும் மாற்றிமைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே அக் கண்டம் ஆண்டுதோறும் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
