அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம்

அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வோம் என தென் ஆப்பிரிக்கா அணியின் கப்டன் டுபெலிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறித்து தென்ஆப்பிரிக்கா  கப்டன் டுபெலிசிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். டெஸ்ட் தொடரை வென்ற நாங்கள் கடைசி டெஸ்டில் வெல்வோம். 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியாவை ஒயிட்வாஷ் செய்வதே எங்களது இலக்காக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.