வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பனல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் தனது விஷேட உரையில் தொடர்ந்து கூறியதாவது, அன்று அமைச்சர்களுக்கு எதிரான குற்றக் கோப்புக்களை விசாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியாதிருந்தது. அந்தவகையில் தற்போது மிகவும் துரிதகதியில் நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக நான் பெருமைப்படுகின்றேன். அதேபோன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு நான் கூறுகின்றேன், கடந்த அரசாங்கம் தொடர்பாக ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ காலமானார்!
அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ எனப் போற்றப்படும் தடகள வீராங்கனையும், நான்கு முறை ஒலிம்பிக் சம்பியன் பட்டம் வென்றவருமான பெட்டி குத்பேர்ட் (Betty Cuthbert) தனது 79வது வயதில் காலமானார். கடந்த ஐந்தாண்டு காலமாக தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய தடகள அமைப்பு அறிவித்துள்ளது. இவர் 1956 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார். தொடர்ந்து 8 வருட ஓய்வின் பின்னர் ...
Read More »அவுஸ்ரேலிய அணியின் பீ்ல்டிங் பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்
அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான முன்னாள் பேட்ஸ்மேன்- மீடியம் பந்து வீச்சாளரான கிரேக் ப்ளிவெட் இருந்து வந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கிரிக்கெட் சங்கமான தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிவதற்காக தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால் பிராட் ஹாடின் புதிய பீல்டிங் பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார். ஹாடின் 2019-ம் ஆண்டு வரை இந்த பதவியை விகிப்பார். பிராட் ...
Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வடக்குக் கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி. இதனைத் தான் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறி வந்தார்கள். ஆனால் தேர்தலின் பின்னர் அவர்கள் ஒற்றையாட்சி, 13ஆவது திருத்தச் சட்டமென்று அரசாங்கம் ...
Read More »கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய தவித்த அவுஸ்ரேலிய சிறுவன்
சிலந்தி அளவிலான கடல் பூச்சிகள் கடித்ததால் கால்களில் ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய சிறுவன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை சாம் கனிசே (16) , மெல்போர்னின் பிரைட்டன் கடலில் கால்களை நனைத்த பிறகு, அவரது கால்களிலும் கணுக்கால்களிலும் ரத்தம் வழிந்துள்ளது. “போரில் அடிப்பட்டது போல” தன் மகன் வீட்டுக்கு வந்ததாகக் கூறும் சாம்மின் தந்தை ஜரோட் கனிசே, அவனது கால்களில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை என்கிறார். சதையை உண்ணும் பூச்சியை கண்டறிவதற்காக, நிபுணர்களின் கருத்துக்களை ...
Read More »அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கான இலவச யோகா பயிற்சி!
அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினை இலண்டனில் பார்த்ததிலிருந்து, அவுஸ்ரேலியாவிலும் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்ட, அவுஸ்ரேலிய பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg) அதைச் செயலிலும் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் டேனியல் ஃபெக் அவர்களின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டுவரும் இலவச அகதிகள் யோகா திட்டத்தில் கற்றுக்கொடுக்கப்படும் யோகக்கலை குறித்த சில காணொளிகளை கீழே காணலாம். இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள http://www.refugeeyogaproject.com/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.
Read More »சிட்னியில் இருந்து துபாய் நோக்கி பயணமான கப்பல்!
Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த கப்பலானது இந்திய பெருங்கடல், அரேபிய கடல், ஏடன் வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணம் மேற்கொண்டபோது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்காமல் இருக்க கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. குறித்த பகுதிகள் ...
Read More »வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த அவுஸ்ரேலியர்!
அவுஸ்ரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயம் தொடர்பான பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் ...
Read More »சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பி அனுப்பப்பட்ட 13 பேரும், அண்மைய நாட்களில், கடலில் இடைமறிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ‘குடியுரிமை பெறாத இவர்கள் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்களல்ல. அவுஸ்ரேலியாவில் சட்டரீதியாக தங்கியிருக்க தகுதியற்றவர்கள். சட்டரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்ய முனையும் எவரும், அவுஸ்ரேலியாவில் ...
Read More »அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா இளைஞன் விபத்தில் மரணம்!
அவுஸ்ரேலியா மெல்பேர்ண் நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. களுத்துறை மாவட்டம் அளுத்கம என்ற இடத்தைச் சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »