அவுஸ்ரேலியா மெல்பேர்ண் நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.
களுத்துறை மாவட்டம் அளுத்கம என்ற இடத்தைச் சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal