நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லையென வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் ப. டெனிஸ்வரன் அறிவித்துள்ளார். தேவையாயின் முதலமைச்சரோ எனது கட்சியோ அதனை செய்யட்டுமென தெரிவித்துள்ள அவர் தான் சுயமாக பதவிவிலகப் போவதில்லை என சவால் விடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்ற் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். பா.டெனிஸ்வரன் தான் வகித்துவரும் அமைச்சு பதவியினை விட்டு விலக வேண்டுமென கூறிவரும் ரெலோவின் உயர்மட்டக்குழு கடந்த 12ம் திகதி வவுனியாவில் கூடி அவர் தனது முடிவை அறிப்பதற்கு ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியா நாட்டினரை அசரவைத்த ஐஸ்வர்யா ராயின் மகள்!
பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில இடைவெளி விட்டு ஏக் தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இந்திய திரைப்பட விழா மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா தன் மகளுடன் கலந்து கொண்டார். அதில் ஆரத்யா இந்திய தேசியகீதத்தை பாடி அசத்தினார். இதை பலரும் பாராட்டினர். இருவரும் தேசிய கொடியை ...
Read More »சிறிதரனின் கடிதத்தலைப்பு மோசடி குறித்து சிஐடி விசாரணை!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை அடுத்து ...
Read More »அவுஸ்ரேலியாவில் விமான விபத்து!
அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கலோந்திரா விமான நிலையத்திலேயே நேற்று ( 12-சனிக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளையில், ஓடு பாதையில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விமான விபத்தில் விமானி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த விமானத்தில் பயணித்த நான்கு பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.
Read More »எம்.எச்.370 – மலேசிய விமானத்தின் தேடும் பணியில் அவுஸ்ரேலியா!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடுவானில் காணாமல்போன எம்.எச்.370 என்ற மலேசிய விமானத்தின் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கடற்படுகை நிறுவனம் முன்வந்துள்ளது. மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது, நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியை மலேசியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தன. இந்தியப் பெருங்கடலில் ...
Read More »வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள்!
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர் தற்போதுள்ளவர்களையும், தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சியாளர்களையும் சுட்டிக்காட்டும் படலம் தொடர்ந்தவண்ணமுள்ளது. புதிய ...
Read More »உலகின் அதிக வயது தாத்தா மரணம்
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான முதியவர் கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர். கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார். 1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த அவர், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் கிறிஸ்டல் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் ...
Read More »டிரம்பை கேலி செய்து வெள்ளை மாளிகை முன்பு வைக்கப்பட்ட கோழி பொம்மை
அமெரிக்க அதிபர் டிரம்பை திறமை இல்லாதவர் என சித்தரிக்கும் வகையில் வெள்ளை மாளிகை முன்பு காற்றடைத்த கோழி பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைக்குரிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். 6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள், மெக்சிகோ- அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்புதல் போன்ற அறிவிப்புகளால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாஷிங்டன் அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அருகே காற்றடைத்த கோழி பொம்மை ...
Read More »கிளிநொச்சியில் குண்டுச்சத்தங்கள்! மக்கள் விசனம்!
கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் ...
Read More »அமெரிக்காவுக்கு உதவத் தயார் : அவுஸ்ரேலியா
வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு உதவ முன்வரப் போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்சுடன் பேசியபோது, அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் (Malcolm Turnbull) அவ்வாறு கூறினார். பொருளியல் தடைகளை விதிப்பதே, வடகொரியாவைக் கையாள்வதற்கான மேலும் சிறப்பான வழி என்றார் டர்ன்புல். ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை, வடகொரியாவுக்கு எதிரான மேலும் சில கடுமையான தடைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அந்தத் தடைகளால், வடகொரியா ஆண்டுக்குச் சுமார் ஒரு பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க ...
Read More »