செய்திமுரசு

பாதுகாப்பை அதிகரித்தது அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம்

அவுஸ்ரேலியாவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா சென்று விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா கடும் போராட்டத்திற்குப் பின் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி பிரபலமான மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் போட்டி 26-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய ...

Read More »

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று (24) சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட சிங்கள ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மன்றில் நிறுத்தப்படாத முதலாவது, இரண்டாவது ...

Read More »

விரைவில் மாவையின் சுயசரிதை!

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தனது வாழ்க்கைப்பயணத்தை ஆவணமாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பில் சக அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் தன்னை வலியுறுத்திவருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அண்மையில் இருளுள் இதய பூமி எனும் மணலாறு நில சுவீகரிப்பு தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிடுகையில் மணலாறின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது காலடி பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது சிறைவாழ்வு உள்ளிட்ட அரசியல் பயணத்தை ஆவணப்படுத்த சுயசரிதை நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்தார். இதே வேளை தமிழ் மக்கள் ...

Read More »

சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. 22 ஆம் திகதி நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் ...

Read More »

மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் கைது

அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது நாட்டு வீரர்களை ஈடுபடுத்திவரும் அவுஸ்ரேலியாவை தாக்க ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பிரகடனம் செய்துள்ளன. இதையடுத்து, அமைதியான நாடாக அறியப்பட்ட அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களையும், முயற்சிகளையும் அந்நாட்டு உளவுத்துறையினர் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கிருஸ்தவ கட்டத்தில் எரிவாயு சிற்றூர்த்தி மோதியது

அவுஸ்ரேலியாவின் தலைநர் கன்பராவில் கிருஸ்தவ லொபி கட்டிடத்தில் எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்த்தி ஒன்று கட்டிடத்தில் மோதியத்தில் கட்டிடத் சேதமடைந்தவுடன் சிற்றூர்தி முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று(21)  புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சிற்றூர்த்தி ஓட்டுநர் பலத்த எரிகாயங்களுடன் கன்பரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முதலில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த காவல்துறையினர் பின் ஓட்டுநரிடம் விசாரணைகளை நடத்திய பின் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More »

அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!

மெல்பார்ன்  – பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பார்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்காக அவுஸ்ரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடும்போராட்டத்திற்குப்பின் அவுஸ்ரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்ட்ரைட் சேர்ப்பு 2-வது படம் டிசம்பர் 26-ந்திகதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் இம்பிடித்துள்ளார். ...

Read More »

2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார். இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) இந்த விருதினை வென்றுள்ளனர். ஒரே வருடத்தில் இரு விருதுகளை பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் ...

Read More »

விடுமுறை நாட்களில் மெல்பேர்ணில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள்

கிறிஸ்மஸ் மற்றும் Boxing day விடுமுறை நாட்களில் மெல்பேர்ணில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், சுற்றுலா மையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை எத்தனை மணி வரைக்கும் திறந்திருக்கும் என்ற விபரங்களும் போக்குவரத்து அட்டவணை பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இதேவேளை கிறிஸ்மஸ் தினத்தன்று முழுநாளும், 31ம் திகதி பிற்பகல் 6 மணி முதல் 1ம் திகதி அதிகாலை 6 மணி வரையும் பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்திலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Supermarkets Coles: December 25: Closed, December 26: 8.30am-5.30pm, ...

Read More »

தமிழீழ மக்களுக்கு அடேல் பாலசிங்கம் அவர்களின் அவசர அறிவிப்பு

20 மார்கழி 2016 ஊடக அறிக்கை எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ஒன்றில் விதைத்து (புதைத்து), அங்கு அவருக்கான நினைவுத் தூபி ஒன்றைக் கட்டப் போவதாகவும் ...

Read More »