அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் சேர்ப்பு!

மெல்பார்ன்  – பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பார்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்காக அவுஸ்ரேலியா அணியில் ஆல் ரவுண்டர் கார்ட்ரைட் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி
பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடும்போராட்டத்திற்குப்பின் அவுஸ்ரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்ட்ரைட் சேர்ப்பு
2-வது படம் டிசம்பர் 26-ந்திகதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் கார்ட்ரைட் இம்பிடித்துள்ளார். இவர் ஒரு ஆல்ரவுண்டர் வீரர். மிட்செல் மார்ஷின் இடத்தை இவர் கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்ரேலியா வீரர்கள் விவரம்
மெல்போர்ன் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. ரென்ஷா, 3. கவாஜா, 4. ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), 5. பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப், 6. நிக் மேடின்சன், 7. ஹில்டன் கார்ட்ரைட், 8. மேத்யூ வடே (விக்கெட் கீப்பர்), 9. மிட்செல் ஸ்டார்க், 10. ஹசில்வுட், 11. லயன், 12. பேர்டு, 13. சாட் சேயர்ஸ்.