செய்திமுரசு

எனது நல்ல புகைப்படத்தை வெளியிடுங்கள் – தேடப்படும் அவுஸ்ரேலிய பெண்

குற்ற வழக்கில் தேடப்படும் அவுஸ்ரேலிய பெண் ஒருவர் தனது சோகமான புகைப்படத்தை மாற்றி, புன்னகையுடன் இருக்கும் அழகான படத்தை வெளியிடும்படி காவல்துறையினரை முகப்புத்தகம் மூலம் கேட்டுக்கொண்டது வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த எமி சார்ப் என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டனர். இளம்பெண்ணின் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை தொலைக்காட்சி சேனல் ஒன்று சமூக வலைதளத்தில் செய்தியாக பதிவு ...

Read More »

மைத்திரி ஊழல்- அவுஸ்திரேலிய ஊடகச் செய்தி -வெளிவிவகார அமைச்சு மௌனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை விசித்திரமானது. சீனாவின் உதவியுடன், மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம்

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு’ என்ற கருப்பொருளுடன் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது. குறித்த ஊர்வலம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடங்கி ஐ.நா அலுவலகம் வரை செல்ல உள்ளது. மேலும், குறித்த ஊர்வலம் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்றைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் “அரசே மறைத்த போராளிகளை வெளியே கொண்டு வா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு” போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை சுமந்து சென்றனர்.

Read More »

கில்லெஸ்பி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்

அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கில்லெஸ்பி, யார்க்‌ஷையர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார். அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியான யார்க்‌ஷையரின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் அந்த அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த 2014 மற்றும் 2015-ல் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்திற்கு தயாராகி வருகிறது. இவரது தலைமையில் அந்த அணி 76 சாம்பியன்ஷிப் ...

Read More »

2050-இல் உலக மக்கள் தொகை எவ்வளவு?

உலக மக்கள் தொகை கண்காணிப்பகம் நடத்திய ஆய்வில் 2050-ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தொடும் எனவும், இதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்கள் தொகை தற்போது 740 கோடியாக உள்ள நிலையில் 2050-ஆம் ஆண்டில் இது 1000 கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050-ஆம் ஆண்டின்போது, ஆப்ரிக்க நாடுகளின் மக்கள்தொகை 250 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாகவும் இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு ...

Read More »

‘எழுக தமிழ்’ வடக்கில் நீதி கோரிப் போராட்டம்!

எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மக்களை ஒன்றிணைத்து நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்றுகூடலிற்கு ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்டனப் பேரணி மற்றும் பொங்கு தமிழ் ஒன்றுகூடலினை இணைக்கும் பெயராக ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் – ஒரு கொள்கையின்கீழ் ஒன்றிணைத்தலுக்குப் பெயரே பொங்குதமிழ். தமிழர்களைப் பீடித்துள்ள மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தைக் குறிக்கும் குறியீடு. எம்மை நாமே ஆள்வதற்கும், எமக்கெதிரான அனைத்துத் தளைகளிலிருந்தும் எம்மை விடுவித்துக்கொள்ளுதலைப் பிரகடனம் செய்யும் ...

Read More »

அவுஸ்ரேலியன் இணையதளத்துக்கு எதிராக அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மனுதாக்கல்

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அவுஸ்ரேலிய இணைய தளம் வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று பிரான்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் அவுஸ்ரேலிய கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. பிரான்ஸ் நாட்டின் டி.சி.என்.எஸ். கப்பல் கட்டுமான நிறுவனத்திடம் இந்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு ‘ஸ்கார்பீன்’ ரக 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இவை, இன்னும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படாத நிலையில் இந்த கப்பல்கள் பற்றிய 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் ‘தி அவுஸ்ரேலியன்’ என்னும் பத்திரிகையின் ...

Read More »

தனியாக உலகை வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞன்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று அவுஸ்திரேலிய இளைஞன் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த லக்லான் ஸ்மார்ட் என்பவர் தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார். அதன்படி மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து ஜூலை 24ஆம் திகதி ஸ்மார்ட் தனது பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து 15 நாடுகளின் 24 இடங்களுக்குச் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார். இதையடுத்து ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ...

Read More »

மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!

எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதுடன், மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் எமது சொந்த மண்ணையும் ...

Read More »

அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்

அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெயார் பெக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்   மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என அவுஸ்திரேலிய ஊடகம் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஸ்னோவே மவுன்டன் என்ஜினியரிங் கம்பனி என்ற நிறுவனத்திடம் 2.5 மில்லியன் ரூபா ...

Read More »