செய்திமுரசு

தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக!

வடக்கு முதல்வர் மீது நம்பிக்கையில்லை பிரேரணை கொண்டு வந்ததை அடுத்து  இன்று(16) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து முதலமைச்சரின் இல்லம் வரை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் “சதிகாரர் வீட்டிலிருந்து வெளிவந்து தமிழருக்கு தலமையேற்க வா” “தலைவா வா தலைமையேற்க வா”, “விக்கி ஐயாவின் பேச்சு தமிழரின் மூச்சு” “சுமந்திரன் ரணில் கூட்டு தமிழனுக்கு வேட்டு” “சீனிக்கள்ளன் சிவஞானத்துக்கு வேண்டுமா முதல்வர் பதவி?”, “நிறுத்து நிறுத்து தமிழரசுக் ...

Read More »

இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால்

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சருக்கெதிராக தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இன்று கர்த்தால் அனுட்டிக்க அறைகூவல் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கூடாநாட்டில் மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன. இதற்கு, வணிகர் ...

Read More »

மகனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமா பரிசு வழங்கிய தாயார்!

அவுஸ்ரேலியாவில் உள்ள தாய் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய “டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்”-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர் தற்போது தனது 13-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இவ்வளவு நாள் குழந்தை என்ற நிலைமை மாறி தற்போது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது செல்ல மகன் ஜேம்ஸிற்கு, டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்டை பரிசாக வழங்கினார் செபி. அந்த ‘கிட்’டில் ஆணுறை, ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு ...

Read More »

பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளுக்கு நட்டயீடு

பப்புவா நியுகினியில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கு நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவுஸ்ரேலிய அரசாங்கமும், ஒப்பந்த நிறுவனங்களும் 35 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியுகினியா முகாம்களில் 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாக, ஆயித்து 905 அகதிகள் முறையிட்டுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், தற்போது இதனை தீர்த்துக் கொள்வதற்காக நட்டஈடு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு படகுகள் மூலம் அகதிகளாக ...

Read More »

கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா – அவுஸ்ரேலியா சம்மதம்!

அவுஸ்ரேலியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. “ஆஸின்டெக்ஸ்” என்ற பெயரிலான இந்தப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் கப்பற்படையின் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். இப்போது நடைபெறவிருப்பது இரண்டாவது போர்க்கப்பல் பயிற்சியாகும். ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலின் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் இடம்பெற்ற கூட்டுப்பயிற்சி 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கூட்டுப் பயிற்சிக்கு கடந்த வாரம் இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது, சம்மதம் தெரிவித்திருப்பதாக புதுடெல்லியில் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய ...

Read More »

வடமாகாண முதலமைச்சராக சி.வி.கே.சிவஞானம்?

விசாரணைக்குழு அறிக்கையின்படி வடமாகாண அமைச்சர்கள் நான்குபேருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தநிலையில் இருவரை பதவி விலகுமாறும், மற்றைய இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார். முதலமைச்சரின் இச்செயற்பாடானது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நியாயத்தைக் கேக்காது தன்னிச்சையாக கட்டாய விடுப்புவழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கை அரசியல் மட்டத்தில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. முதலமைச்சரின் இந்நடவடிக்கையையடுத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனடிப்படையில் ...

Read More »

பதவியை காப்பாற்ற மைத்திரி காலில் வீழ்ந்தார் சத்தியலிங்கம்!

தனது அமைச்சுப்பதவியினை காப்பாற்றுமாறு இலங்கை ஜனாதிபதியின் கால்களினில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் காலில் வீழ்ந்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சத்தியலிங்கத்தின் நண்பரான வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே செய்துவழங்கியுள்ளார். வடமாகாண அமைச்சர்களது ஊழல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சரவையினை கலைப்பது பற்றி சிந்தித்துவருவதாக நம்பப்படுகின்றது.இந்நிலையினில் தனது அமைச்சு பதவியினை காப்பாற்றிக்கொள்ள இலங்கை ஜனாதிபதியின் காலில் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை தொடர்பில் கூடுதல் அதிகாரம்!

குடியுரிமை தொடர்பிலான புதிய சட்ட முன்வடிவில் குடிவரவு அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அதிகாரம் குடிவரவு அமைச்சர் Peter Dutton-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி Tribunal எனப்படும் தீர்ப்பாயத்தின் முடிவுடன் உடன்படவில்லையாயின், அந்த முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கு உண்டு. குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இந்த அதிகாரம் அவசியமானது என குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார். Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி ...

Read More »

மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்து செல்ல வீதியில் படுத்த அவுஸ்ரேலிய வாலிபர்!

அவுஸ்ரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடுவே சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர், ...

Read More »

ராஜாவை காப்பாற்ற முனையும் இராஜவரோதயம்….! – கஜேந்திரகுமார்

சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வாய்கிழியக் கத்திக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இன்று ...

Read More »