தனது அமைச்சுப்பதவியினை காப்பாற்றுமாறு இலங்கை ஜனாதிபதியின் கால்களினில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் காலில் வீழ்ந்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சத்தியலிங்கத்தின் நண்பரான வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே செய்துவழங்கியுள்ளார்.
வடமாகாண அமைச்சர்களது ஊழல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சரவையினை கலைப்பது பற்றி சிந்தித்துவருவதாக நம்பப்படுகின்றது.இந்நிலையினில் தனது அமைச்சு பதவியினை காப்பாற்றிக்கொள்ள இலங்கை ஜனாதிபதியின் காலில் சத்தியலிங்கம் வீழ்ந்துள்ளார்.தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையினில் தனது அமைச்சு பதவியை பறிக்க முற்படுவதாக இலங்கை ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் இவ்விடயம் தொடர்பினில் ஜனாதிபதி கருத்துக்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தன்மீது குற்றச்சாட்டுக்கள் ஏதுமற்ற நிலையினில் அமைச்சு பதவியினை பறிப்பது தொடர்பினில் விசாரணைக்குழு ஒன்றினை அமைக்கவேண்டுமெனவும் இலங்கை ஜனாதிபதியை சத்தியலிங்கம் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.
இதனிடையே அமைச்சர் சத்தியலிங்கத்தினால் அவரது சகோதரர்கள் ஊடாக வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளிற்கு மருத்துவ பரிசோதனை இயந்திரங்களை கொள்வனவு செய்வது தொடர்பினில் மேற்கொள்ளப்பட்ட பலமில்லியன் முறைகேடுகள் தொடர்பான விரிவான அறிக்கை முதலமைச்சரினை கிட்டியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
ஜரோப்பிய ஒன்றிய தயாரிப்புக்களிற்கான பெயரினில் போலி உற்பத்திகள் வழங்கப்பட்டமை அதற்கான தரகு பணத்தை பொருட்களாகவும் பணமாகவும் பெற்றமையுள்ளிட்ட சான்றாதாரங்கள் கிட்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரனுடன் கூட்டு சேர்ந்து மனித உயிர்களுடன் தரகுப்பணத்திற்காக நடத்தப்பட்ட பேர விபரங்களே முதலமைச்சரினை கிட்டியுள்ளதாக சொல்லப்படுகின்றது.