வடக்கு முதல்வர் மீது நம்பிக்கையில்லை பிரேரணை கொண்டு வந்ததை அடுத்து இன்று(16) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து முதலமைச்சரின் இல்லம் வரை முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில்
“சதிகாரர் வீட்டிலிருந்து வெளிவந்து தமிழருக்கு தலமையேற்க வா”
“தலைவா வா தலைமையேற்க வா”,
“விக்கி ஐயாவின் பேச்சு தமிழரின் மூச்சு”
“சுமந்திரன் ரணில் கூட்டு தமிழனுக்கு வேட்டு”
“சீனிக்கள்ளன் சிவஞானத்துக்கு வேண்டுமா முதல்வர் பதவி?”,
“நிறுத்து நிறுத்து தமிழரசுக் கட்சியின் அடாவடியை நிறுத்து”
என கோஷங்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் முதலமைச்சர் சீ.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
Eelamurasu Australia Online News Portal





