அவுஸ்ரேலியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் கூட்டு கப்பற்படைப் பயிற்சிக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
“ஆஸின்டெக்ஸ்” என்ற பெயரிலான இந்தப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் கப்பற்படையின் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். இப்போது நடைபெறவிருப்பது இரண்டாவது போர்க்கப்பல் பயிற்சியாகும்.
ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலின் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் இடம்பெற்ற கூட்டுப்பயிற்சி 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது கூட்டுப் பயிற்சிக்கு கடந்த வாரம் இந்தியா மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது, சம்மதம் தெரிவித்திருப்பதாக புதுடெல்லியில் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய நாடுகளாகத் திகழும் இந்தியாவும், அவுஸ்ரேலியாவும், கடலோரப் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal