பப்புவா நியுகினியில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கு நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவுஸ்ரேலிய அரசாங்கமும், ஒப்பந்த நிறுவனங்களும் 35 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியுகினியா முகாம்களில் 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாக, ஆயித்து 905 அகதிகள் முறையிட்டுள்ளனர்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், தற்போது இதனை தீர்த்துக் கொள்வதற்காக நட்டஈடு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிற்கு படகுகள் மூலம் அகதிகளாக செல்பவர்கள் நவுறு மற்றும் பப்புவா நியுகினியாவில் தடுத்து வைக்கப்பட்டுவருகின்றனர்.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் அகதிகள் கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.