செய்திமுரசு

அவுஸ்தரேலிய விமான வெடிகுண்டு தாக்குதல் திட்டம் குறித்த விசராணை!

எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போடப்பட்ட சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள, துருக்கிய காவல் துறையினர், அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர். அந்த வெடிப்பொருட்கள் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டவை என அவுஸ்ரேலியா கூறுகிறது. அந்தச் சதித் திட்டத்துக்கும், ஐ. எஸ். அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம், சிட்னியில் இருந்து புறப்படவிருந்த விமானத்தில், அவுஸ்ரேலிய ஆடவர் ஒருவர், தனது சகோதரரிடம், வெடிகுண்டைக் கொடுத்து, அனுப்பி வைத்ததாக அவுஸ்ரேலியா காவல் துறையினர் கூறினர். அந்த வெடிகுண்டை, இறைச்சி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமம்!

சிட்னி நகரின் மத்தியில், சுற்றிலும் வானளாவிய கட்டடங்கள். வளமும் வாழ்வும் ததும்பும் நகரப்பகுதியில், வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமமே உருவாகியுள்ளது. நகரின் சொகுசு வட்டாரமான மார்ட்டின் ப்ளேசில் 50க்கும் மேற்பட்ட வீடில்லாதோர் கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். வீடில்லாப் பிரச்சினையில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாதது இந்நிலைமைக்குக் காரணம் என்று நகர மேயர் க்லோவர் மூர் கருதுகிறார். வீடில்லாதோரை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த நகர அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய திருவாட்டி மூர், கட்டுப்படியாகும் விலையில் வீடு வாங்க அரசாங்கம் உதவலாம் எனக் கூறினார். சிட்டியில் ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அயல்நாட்டுத் தமிழர்கள் குறித்த சிறப்பு சொற் பொழிவு தமிழியல் புலத்தில் 01 ஆம் திகதி நடைபெற்றது. தமிழியல் புல பொறுப்புத் தலைவர் வை. ராமராச பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்துறை தலைவர் (பொறுப்பு) போ.சத்தியமூர்த்தி வரவேற்றார். இதில் பங்கேற்ற அவுஸ்ரேலிய நாட்டு தமிழறிஞர் சுவாமி சுப்ரமணியன் பேசியது: அவுஸ்ரேலியாவில் வாழும் மக்கள் குடியேறியவர்கள். பூர்வீக குடிகளாக வாழும் அவர்கள் மொழிவளம் இன்றி வசிக்கின்றனர். அங்கு மதிப்பின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் அங்கு மொழி போர் நடக்கிறது. 600 ...

Read More »

சிட்னி மெல்பேர்ணில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்கள்!

தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார். அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொண்டு கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மெல்பேர்ணில் வேலை நாளாக இருந்தபோதும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலும், சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதும் ஆர்வத்துடன் பலர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கால்பதிக்கும் அமேசன்: பலருக்கு வேலைவாய்ப்பு!

இணைய விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் அமேசன் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் கால் பதிக்கிறது. அமேசன் நிறுவனத்தின் Warehouse ஒன்று மெல்பேர்னில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Dandenong தெற்கில் 24,000 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் Warehouse-அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்கள் பல அமேசன் ஊடாக தமது பொருட்களை விற்பனை செய்துவரும் நிலையில்,அவுஸ்ரேலியாவுக்கான விநியோகங்கள் அனைத்தும் இந்தப் புதிய Warehouse ஊடாக நடைபெறும் என தெரியவருகிறது. இங்குள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரிய ...

Read More »

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் காணாமல் போனவர்களை தேடுகிறது அமெரிக்க கடற்படை!

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அவுஸ்ரேலியஎல்லைப்பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாக அமெரிக்க கடற்படையினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் ஒக்கினாவாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்க விமானம், அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்தது!

கூட்டு பயிற்சியின்போது அவுஸ்ரேலிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் மாயம் ஆனார்கள். அவுஸ்ரேலியா வின் குவின்ஸ்லேண்ட் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா  கடற்படையினர் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் எம்.வி.-22 ஆஸ்பிரே என்ற போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஒரு போர் விமானம், விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் ...

Read More »

குடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் –டிரம்ப்

குடிவரவு கொள்கையை பொறுத்தவரை நீங்கள் என்னை விட மோசமானவர் என அமெரிக்க ஜனாதிபதி  டெனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரிற்கு தெரிவித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது கடந்த ஜனவரியில் இருவரிற்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்தே புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை டிரம்ப் இடைநடுவில் துண்டித்துக்கொண்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது இந்த தொலைபேசி உரையாடல் குறித்த புதிய தகவல்களை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் போது மனஸ் மற்றும் நவ்று முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் ...

Read More »

செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்கள்!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த காலி லோரிடாஸ், செல்லப் பிராணிகளுக்கான சலூன் நடத்திவருகிறார். சமீபத்தில் செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை, நாய் போன்றவற்றின் நகங்கள் சோஃபா குஷன்களைக் கிழித்துவிடுகின்றன. மனிதர்கள் மீது படும்போது காயம் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரிடமும் செல்ல நேரிடுகிறது. அதனால்தான் செல்லப் பிராணிகளின் நகங்களை வெட்டிவிட்டு, செயற்கை நகங்களை மாட்டிவிடுகிறேன். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது. 40 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நகங்களுக்கு 8 வாரங்கள் வரை உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார் காலி லோரிடாஸ்.

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியுரிமைச் சட்டம் மாற்றம்: அகதிகளுக்கு சிக்கல்?

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்ரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள், அகதிகளுக்கு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் அமையக்கூடுமென ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR சுட்டிக்காட்டியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம், 500 தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கின்ற நிலையில், UNHCR-உம் இதில் அடங்குகிறது. Permanent Residency எனப்படும் நிரந்தர ...

Read More »