எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போடப்பட்ட சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள, துருக்கிய காவல் துறையினர்,
அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர். அந்த வெடிப்பொருட்கள் துருக்கியில் இருந்து வரவழைக்கப்பட்டவை என அவுஸ்ரேலியா கூறுகிறது. அந்தச் சதித் திட்டத்துக்கும், ஐ. எஸ். அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மாதம், சிட்னியில் இருந்து புறப்படவிருந்த விமானத்தில், அவுஸ்ரேலிய ஆடவர் ஒருவர், தனது சகோதரரிடம், வெடிகுண்டைக் கொடுத்து, அனுப்பி வைத்ததாக அவுஸ்ரேலியா காவல் துறையினர் கூறினர். அந்த வெடிகுண்டை, இறைச்சி அரைக்கும் இயந்திரம்-போல் தோற்றமளிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அதிகாரிகள் அந்த வெடிகுண்டைக் கண்டெடுத்தனர்.