சிட்னி நகரின் மத்தியில், சுற்றிலும் வானளாவிய கட்டடங்கள். வளமும் வாழ்வும் ததும்பும் நகரப்பகுதியில், வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமமே உருவாகியுள்ளது.
நகரின் சொகுசு வட்டாரமான மார்ட்டின் ப்ளேசில் 50க்கும் மேற்பட்ட வீடில்லாதோர் கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர்.
வீடில்லாப் பிரச்சினையில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாதது இந்நிலைமைக்குக் காரணம் என்று நகர மேயர் க்லோவர் மூர் கருதுகிறார்.
வீடில்லாதோரை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த நகர அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய திருவாட்டி மூர், கட்டுப்படியாகும் விலையில் வீடு வாங்க அரசாங்கம் உதவலாம் எனக் கூறினார்.
சிட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளியல் வளர்ச்சியும் சுரங்க முதலீட்டு நடவடிக்கைளின் அதிகரிப்பும் அங்கு வீட்டு விலைகளை வெகுவாக உயர்த்தியுள்ளன. விலை உயர்வைச் சமாளிக்க முடியாத மக்கள் பலர் திணறுகின்றனர்