அவுஸ்ரேலிய கடல்பகுதியில் காணாமல் போனவர்களை தேடுகிறது அமெரிக்க கடற்படை!

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியஎல்லைப்பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாக அமெரிக்க கடற்படையினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் ஒக்கினாவாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்க விமானம், அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க கடற்படை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.