அவுஸ்ரேலியாவில் கால்பதிக்கும் அமேசன்: பலருக்கு வேலைவாய்ப்பு!

இணைய விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் அமேசன் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் கால் பதிக்கிறது.

அமேசன் நிறுவனத்தின் Warehouse ஒன்று மெல்பேர்னில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Dandenong தெற்கில் 24,000 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் Warehouse-அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்கள் பல அமேசன் ஊடாக தமது பொருட்களை விற்பனை செய்துவரும் நிலையில்,அவுஸ்ரேலியாவுக்கான விநியோகங்கள் அனைத்தும் இந்தப் புதிய Warehouse ஊடாக நடைபெறும் என தெரியவருகிறது.

இங்குள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரிய சவாலாக விளங்கும் என பொருளியில் வல்லுனர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.