யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கயமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி, மனுவின் அறிவித்தல் நீதிமன்றின் ஊடாகக் கிடைக்கப்பெறவில்லை என மன்றுரைத்ததையடுத்தே விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை ...
Read More »செய்திமுரசு
ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!
குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப்புலனாய்வுபிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு!
நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து காவல் துறைக்குக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார். காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ...
Read More »மரண தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 12 மனுத் தாக்கல்!
தூக்கிலிட்டு மரணதண்டனையை அமுல் செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாத்திரம் 11 மனுக்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு மனுவுமாக இந்த 12 மனுக்களும் தக்கல் செய்யப்பட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள கைதிகள் சிலரும், சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளில், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நால்வரை தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவது சட்டத்துக்கு முரணானது எனவும், அதனூடாக சிறைக் கைதிகளின் அடிப்படை ...
Read More »பூஜித்த, ஹேமசிறியை நீதிமன்றில் ஆஜர்செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை!
காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சந்தேக நபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை பதில் காவல் துறை மா அதிபர் இதுவரையில் செயற்படுத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஆலோசனையை பதில் காவல் துறை மா அதிபருக்கு வழங்கியுள்ளார். இந் நிலையில் அது தொடர்பில் இன்று வரை ...
Read More »சிறிலங்காவில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை!
சிறிலங்காவில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. சிறிலங்காவுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அதுசிறிலங்காவின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ‘படைகளின் நிலைப்பாடு’ தொடர்பான உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார். குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு சிறிலங்காவில் ...
Read More »மைத்திரியின் இன்னொரு குத்துக்கரணம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆகப் பிந்திய குத்துக் கரணம், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தூக்கியிருக்கின்ற போர்க்கொடி தான். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம், என்பது பழமொழி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று வெளியிட்டிருக்கின்ற கருத்து, அந்தப் பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்னமும் அவ்வப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு முன்பாகவே இந்தக் கருத்தை முதலில் வெளியிட்டிருந்தார். தற்போதைய அரசாங்கம், கடந்த நான்கரை ஆண்டுகளில் சரியாகச் செயற்படாமல் ...
Read More »மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒசாகா சென்றார். மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி, அமெரிக்கா,ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை ...
Read More »அவுஸ்திரேலியப் பிரதமர் குறித்து முன்னரே கணித்திருந்த ட்ரம்ப்!
அவுஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison-இன் தேர்தல் வெற்றி குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே கணித்துக்கொண்டதைப்போல அவர் வெற்றிபெற்றிபெற்றிருக்கிறார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜி – 20 மாநாட்டுக்கு முன்னதாக அரசுத்தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் Scott Morrison தலைமையிலான அரசு வெற்றிபெற்றது ஏனையவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் Morrison வெற்றி பெறுவார் என்று தான் முன்னமே கணித்திருந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ...
Read More »சிறிலங்கா காவல் துறைக்கு எதிரான முறைப்பாட்டுக்காக புது இணையத்தளம்!
காவல் துறைக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய காவல் துறை ஆணைக்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முகவரி www.npc.gov.lk என்பதாகும். இதன் மூலம் பொது மக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இணையத்தள அறிமுக நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் தேசிய காவல் துறை ஆணைக்குழுவின் தலைவர் பி.எச்.மனத்துங்க, செயலாளர் சமன் திசாநாயக்க முதலானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ...
Read More »