தூக்கிலிட்டு மரணதண்டனையை அமுல் செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாத்திரம் 11 மனுக்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு மனுவுமாக இந்த 12 மனுக்களும் தக்கல் செய்யப்பட்டுள்ளன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள கைதிகள் சிலரும், சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளில், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நால்வரை தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவது சட்டத்துக்கு முரணானது எனவும், அதனூடாக சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் அந்த 12 மனுக்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal