மனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வலைப்பின்னலை விசாரிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சந்திப்பில் இதனை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
Read More »செய்திமுரசு
ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நவாஸ் செரீப் உறவினர்கள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் யூசுப் அப்பாஸ் மற்றும் அப்பதுல் அஜிஸ். சகோதரர்கள் ஆன இருவரும் நேற்று முன்தினம் ஹஜ் புனித பயணத்திற்காக லாகூரில் இருந்து மதினா செல்லும் விமானத்தில் ஏறி இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக குடியுரிமை அதிகாரிகள், அவர்கள் பயணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புதிய ...
Read More »வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்!
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதுடன் 5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ...
Read More »இருப்புக்கான போராட்டம்!
தமிழர் தரப்பு அரசியலுக்கு வெளியிலும் முட்டுக்கட்டைகள். உள்ளேயும் பல முட்டுக்கட்டைகள். இந்த முட்டுக்கட்டைகளைக் கடந்து நாடளாவிய அரசியல் வெளியில் உறுதியாகவும் வலுவாகவும் அது காலடி எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தின் தேவையும்கூட. ஏழு தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை, அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தி, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக அதனை அவர்கள் உதாசீனம் செய்வதே வரலாறாக உள்ளது. தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் சகல உரிமைகளுக்கும் உரித்துடையவர்கள், அவர்கள் சிறுபான்மையாக ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா?
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 ...
Read More »கைதிகளை வாகனத்தில் மாற்றும்போது விபரீதம் : 4 கைதிகள் மூச்சுத் திணறி பலி!
வட பிரேசிலில் கலவரம் இடம்பெற்ற சிறைச்சாலையொன்றிலிருந்து வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட 4 கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். பரா பிராந்தியத்தில் அளவுக்கதிகமான கைதிகளைக் கொண்ட சிறைச்சாலையில் இரு எதிர்க் குழுக்களைச் சேர்ந்த கைதிகளிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் 57 கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சிறைச்சாலையிலிருந்து அபாயகரமான சில கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரக் வண்டியில் அமைக்கப்பட்ட கைதிகளுக்கான 4 வேறுபட்ட பிரிவுகளில் 30 கைதிகள் கொண்டுசெல்லப்பட்டனர். இதன்போதே 4 கைதிகள் மூச்சுத் ...
Read More »தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மோடி அரசாங்கம்!
இந்தியாவின் 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கடந்தவாரம் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திருத்தம் மத்தியிலும் மாநில மட்டங்களிலும் தகவல் ஆணையாளர்களின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தியிருப்பதுடன் மத்தியில் சகல அதிகாரங்களையும் குவித்ததன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை அரித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியும் அதன் நேசக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் வலிமையான பெரும்பான்மையின் விளைவாக நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை காங்கிரஸ், திரிநாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கடுமையாக எதிர்த்தன. திருத்தம் தகவல் ஆணையாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட பதவிக்காலத்தை நீக்குகிறது ...
Read More »சஹ்ரானை நாம் நெருங்கினோம் சூட்சுமமாக தப்பிக்கொண்டார்!
சஹ்ரான் குறித்து பல இடங்களில் தேடி அவரை நெருங்கினோம். ஆனால் அவர் சூட்சுமமாக எம்மிடம் இருந்து தப்பித்துக்கொண்டார் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் ஜகத் விசாந்த நேற்று சாட்சியமளித்தார். நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று நடைபெற்ற அமர்விலேயே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், கேள்வி :- உங்களின் பதவி என்ன ? பதில் :- எஸ்.எஸ்.பி கேள்வி:- ரி.ஐ.ரி யினால் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து முதலில் ...
Read More »30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை!
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து ...
Read More »செலவீனங்களை வரி ஊடாக பெற விநோதமான விண்ணப்பங்கள்!
திருமணச்செலவு, குழந்தை பராமரிப்பு, பல்வைத்தியம் போன்ற – வரியில் மீளப்பெறமுடியாத செலவினங்களையெல்லாம் tax return ஊடாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று ATO-ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து வரித்திணைக்கள துணை ஆணையர் Karen Foat குறிப்பிடும்போது இந்த தகவலை கூறினார். கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு இவ்வாறு முறையற்ற கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். Tax return விண்ணப்பங்களில் தமக்கு கிடைத்த விநோதமான சில சம்பவங்களை அவர் ...
Read More »