கைதிகளை வாக­னத்தில் மாற்றும்போது விப­ரீதம் : 4 கைதிகள் மூச்சுத் திணறி பலி!

வட பிரே­சிலில் கல­வரம் இடம்­பெற்ற சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து வாக­ன­மொன்றில் கொண்டு செல்­லப்­பட்ட  4 கைதிகள்  மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பரா பிராந்­தி­யத்தில் அள­வுக்­க­தி­கமான கைதி­களைக் கொண்ட சிறைச்­சா­லையில்  இரு எதிர்க் குழுக்­களைச் சேர்ந்த கைதி­க­ளி­டையே  நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் 57  கைதிகள்  உய­ிரி­ழந்­துள்ள நிலையில்  அந்த சிறைச்­சா­லை­யி­லி­ருந்து  அபா­ய­க­ர­மான சில கைதி­களை  வேறு சிறைச்­சா­லைக்கு இட­மாற்றும் நட­வ­டிக்கை  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதனையடுத்து ட்ரக் வண்­டியில் அமைக்­கப்­பட்ட கைதி­க­ளுக்­கான 4 வேறு­பட்ட பிரி­வு­களில் 30 கைதிகள் கொண்­டு­செல்­லப்­பட்­டனர்.

இதன்­போதே 4 கைதிகள் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­துள்­ள­தாக   பரா மாநில பொதுப் பாது­காப்பு மற்றும் சமூக பாது­காப்பு  பிரிவின் செய­லாளர்  தெரி­வித்­துள்ளார்.