வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதுடன் 5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எமது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அகற்றிவிடுமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயங்கள் குறித்து வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபனிடம் கேட்டபோது, திருநாவற் குளம் விளையாட்டு மைதானப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோபுரம் 5ஜி கோபுரம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும் பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அவ்விடத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை பண்டாரிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் குறித்து நகரசபை உறுப்பினர் கே.சுமந்திரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நகரப்பகுதியில் மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் கோபுரம் நகரசபை உறுப்பினர்களின் அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் 5ஜி வலைமைப்பின் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
அண்மையில் வவுனியா இறம்பைக்குளம் மயானப்பகுதியில் கோபுரம் அமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டதுடன் உடனடியாகவே அந்நிறுவனம் அங்கு கோபுரம் அமைக்கும் பணியைக் கைவிட்டுச் சென்றதுடன் வெட்டப்பட்ட குழியையும் மூடிவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal