செய்திமுரசு

யாழ்.ஊடகவியலாளர் சோபிதனிடம் காவல் துறை விசாரணை!

வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு  காவல் துறை  தலைமையகத்திற்கு இன்று  விசாரணைக்கு சமுகமளிக்குமாறு காவல் துறை  தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை ...

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் பணம் எவ்வளவு தெரியுமா ?

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேட்பாளர் எண்ணிக்கை கூடினால் தேர்தலுக்கான செலவு 4 பில்லியனில் இருந்து 5 பில்லியனாக அதிகரிக்கலாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை 23 வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் ...

Read More »

இராக்கில் அரசு எதிரான வன்முறை: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு; 1500 பேர் காயம்!

இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1500 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறை காரணமாக இராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரசுக்கு ...

Read More »

மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் டெல்லியில் ‘Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்ற இருக்கிறார் ஸ்காட் மோரிசன். இந்த நிகழ்வு அடுத்தம் வருடம் ஜனவரி மாதம் 14 தேதி முதல் ஜனவரி ...

Read More »

சங்கடப்படுவாரா கோத்தாபய ?

ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட கள­மாக மாற்றம் பெற்­றுள்­ளது. இந்தத் திருப்­பங்கள் முக்­கிய கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளாக யார் யார் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­படப் போகின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தி­லேயே அமையும் என்று எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்­படக்கூடும் என்­பதே அந்த எதிர்­பார்ப்பு. பெரு­ம­ள­வி­லான ...

Read More »

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிதாக ஏவுகணையை ஏவிப்பரிசோதனை!

வடகொரி­யா­வா­னது நேற்று அதி­காலை ஏவு­க­ணை­­யொன்றை ஏவிப் பரி­சோ­தித்­த­தாக  தகவல் வெளியா­கி­யுள்­ளது. அமெ­ரிக்­கா­வுடன் புதி­தாக அணு­சக்தி பேச்­சு­வார்த்­தை­களை நடத்தத் தயா­ராக இருப்­ப­தாக வடகொரியா அறி­வித்து ஒரு சில மணி நேரத்தில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத் ­தக்­கது. இது தொடர்­பான தக­வல்கள் ஜப்­பா­னிய மற்றும்  தென்கொரிய  அதிகா­ரி­களை மேற்­கோள்­காட்டி  பிராந்­திய ஊட­கங்­களில் வெளியிடப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இந்த ஏவு­கணைப் பரி­சோ­தனை குறித்து அமெ­ரிக்­காவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வொன்ஸன் துறை­மு­கத்­துக்கு அருகில்  நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்­றி­லி­ருந்து  ஏவப்­பட்­ட இந்த புக்­குக்சோங் வகையைச் சேர்ந்த ஏவு­கணை சுமார் 450 கிலோ­மீற்றர் தூரத்­துக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்த நபர்!

வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். டானியல் கிங் என்ற நபரையே காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இரவு 8.45 மணியளவில் குறிப்பிட்ட நபர் மரயோங் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு கர்ப்பிணிப்பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர்  சென்மேரிஸ் காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் ...

Read More »

சஜித்தின் தாயை அழைத்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணில்!

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.   சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட, ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் சஜித் பிரேமதாஸவின் பெயர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டது.   ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட பொது சம்மேளன கூட்டம் இன்று கொழும்பு ...

Read More »

ஐ.தே.க மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52  நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது,  நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ...

Read More »

தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு !

1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு  ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள்  உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் ...

Read More »