ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் பணம் எவ்வளவு தெரியுமா ?

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேட்பாளர் எண்ணிக்கை கூடினால் தேர்தலுக்கான செலவு 4 பில்லியனில் இருந்து 5 பில்லியனாக அதிகரிக்கலாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை 23 வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் சமூக ஊடகங்களில் கட்டுப்படுத்தப்படும். கூகுள், பேஸ்புக், யூரியூப் உட்பட ஏனை சமூக ஊடகங்களுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.