செய்திமுரசு

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின்போது, இவ்வாறு 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். குழந்தை பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். பிறந்த நான்கு குழந்தைகளும் வைத்தியர்களின் விசேட பராமரிப்பில்(இன்கியூபேட்டர்) பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ...

Read More »

வடக்கு, கிழக்கில் கடுமையான பாதுகாப்பு!

கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்கிறக் குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, வடக்கு, கிழக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து வடக்கில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றிலிருந்து நவீன தொடர்பாடற் கருவிகளும், சக்தி வாய்ந்த வெடிப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த ...

Read More »

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவே!

ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் ‘கொரோனா’வில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’ பாதிப்பு குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் ...

Read More »

அன்பழகன் வாழ்க்கை வரலாறு!

திமுக பொதுச்செயலாளர், கருணாநிதியின் உற்ற நண்பர், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவர் க.அன்பழகன் இன்று மறைந்தார். அவரது நீண்ட நெடிய பொதுவாழ்வு குறித்த சிறு குறிப்பு. திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான். திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன். எனக்கு அண்ணன் இல்லை அதனால் அன்பழகனை என் அண்ணனாக பார்க்கின்றேன் என்பார் கருணாநிதி. 1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். ...

Read More »

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்!

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவரும், பேராசிரியர் என அழைக்கப்பட்ட க.அன்பழகன் காலமானார். திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வெறிச்சோடி வரும் சூப்பர் மார்க்கெட்டுகள் – காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சூப்பர் மார்க்கெட் கடைகளில் டிஷ்யூ பேப்பர்கள், வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவை உடனே விற்று தீர்ந்துவிடுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.87 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் ...

Read More »

சிட்னியில் மழை பெய்ததால்…….! எங்கள் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது!

சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது. முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ...

Read More »

சிவசேனை தமிழர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது. வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது. கிழக்கில் தமிழ்த் தரப்புகளின் ...

Read More »

விமான நிலையத்துக்கு வருவோர்க்கு முக்கிய அறிவித்தல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு  இன்று (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும். அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும்  வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும். இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி இன்று  காலை திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது.

Read More »

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நிர்க்கதியில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னரும் கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில், ...

Read More »