கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு இன்று (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும்.
அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும்.
இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி இன்று காலை திறக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது.
Eelamurasu Australia Online News Portal