செய்திமுரசு

வெளிநாட்டுப் பிரஜைகள் 13 பேர் க‍ைது!

கொழும்பை அண்டிய பகுதிகளான நவகமுவ, கல்கிஸ்ஸை, வெலிகட மற்றும் தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் காரணமாககாவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய கொழும்பை அண்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக வீசாவின்றி தங்கியிருந்த பெண்ணொருவர் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை காவல் துறை ...

Read More »

யாழில் வாள்வெட்டு!

அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21)  எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நேற்றைய தினம் ...

Read More »

மெல்பேர்ன் நகரிற்கு வரும் புதிய கட்டுப்பாடு!

மெல்பேர்ன் நகரின் மையப்பகுதிகளிலுள்ள தெருக்களில் வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மணிக்கு 30 கிலோ மீற்றராக குறைக்கப்படவுள்ளதாக மெல்பேர்ன் கவுன்ஸில் தெரிவித்துள்ளது. மெல்பேர்ன் நகரின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாட்டானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருந்த போதும் தற்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள வீதிகளில் மேற்படி புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன் நகர மைய வீதிகளில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டைக்கொண்டுவரவுள்ளது. நகரின் மத்தியில் தற்போது எடுக்கப்பட்டுள்ள ...

Read More »

இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு சான்றிதழ்!

சகிப்புத்தன்மையை நோக்கி முன்னேறிச் செல்லும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் தாய்க்கும் இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் ...

Read More »

மீரிகமையில் ஆடை கொள்வனவு செய்துள்ள தீவிரவாதிகள்!

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாத குழுவின் உறுப்பினர்களுக்கு மீரிகம- கிரிஉல்லயில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பிரிவு குற்ற விசார​ணைப் பிரிவினரும் மீரிகம  காவல் துறை  இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டில் காணப்பட்ட பையில் குறிப்பிட்டப்பட்ட முகவரித் தொடர்பில் விசாரணைகளை நடத்தியகாவல் துறை, கடந்த 19ஆம் திகதி முகத்தை முழுவதுமாக மறைத்த நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தில் 3 பெண்கள் ...

Read More »

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் கருவியுடன் ஒருவர் கைது!

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், கத்திகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ- கல்லெலிய பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும் என்றும், இந்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்றும் காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். வெயங்கொட பகுதியில் ஓட்டோவொன்றை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில்வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  பெண்கள் இருவரும் இளைஞரொருவரிடமும் ...

Read More »

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ​கொழும்பு தலைவர் கைது!

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ​கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் வி​சேட காவல் துறை குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

வெலிகம பிரதேச வீடொன்றிலிருந்து 10 மி.ரூபாய் கண்டுபிடிப்பு!

வெலிகம- மதுராகொட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்த வீடொன்றின் கட்டிலுக்கு கீழே பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியனுக்கு அதிகமான பணத்துடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பணத்தை சம்பாதித்த காரணத்தை அவர் வெளிப்படுத்த முடியாமல் போனதாலேயே வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை குறித்த வீட்டில் எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் சவுதியில் கணினி விற்பனை ​மய்யத்தில் பணியாற்றி வருகிறாரென்றும் அவரது மனைவி கடந்த டிசெம்பர் மாதம் ...

Read More »

தற்கொலை குண்டுதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்​கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர், பயணித்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 3 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் இன்று திகாரிய பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அரச புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நிட்டம்புவ காவல்  துறை , கம்பஹா புலனாய்வு பிரிவுடன் இணைந்து நிட்டம்புவ பொலிஸ் நிலைய மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று திகாரிய பிரதேசத்தில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையையடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ...

Read More »

கோத்தாபய அமெரிக்க குடியுரிமையை இழந்தார்!

தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், சிறிலங்காவில் உள்ள  அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »