மெல்பேர்ன் நகரின் மையப்பகுதிகளிலுள்ள தெருக்களில் வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மணிக்கு 30 கிலோ மீற்றராக குறைக்கப்படவுள்ளதாக மெல்பேர்ன் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
மெல்பேர்ன் நகரின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாட்டானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இருந்த போதும் தற்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகக்கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள வீதிகளில் மேற்படி புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் நகர மைய வீதிகளில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டைக்கொண்டுவரவுள்ளது.
நகரின் மத்தியில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி வீதிப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர்களின் 89 வீதமனவர்கள் பாதாசாரிகளே என்பது அறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேகக்கட்டுப்பாட்டு அறிமுகம் மாத்திரமல்லாமல், பாதாசாரிகள் வீதியைக்கடக்கும் நேரத்தை அதிகரிப்பது, வீதிக்கடவைகளின் அகலத்தை கூட்டுவது, துவிச்சக்கர வண்டிகளுக்கான ஓடுபாதையை விஸ்தரிப்பது போன்றவற்றையும் நகரின் மைய வீதிச்சீரமைப்பின் நடைமுறைப்படுத்தவுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
அடுத்தமாதம் வெளியிடப்படவுள்ள நகரின் புதிய சீரமைப்புத்திட்டம் தொடர்பான வரைவில் இந்த மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal