மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர், பயணித்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 3 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் இன்று திகாரிய பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நிட்டம்புவ காவல் துறை , கம்பஹா புலனாய்வு பிரிவுடன் இணைந்து நிட்டம்புவ பொலிஸ் நிலைய மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று திகாரிய பிரதேசத்தில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையையடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கிராமமொன்றில் வாடகை வீடொன்றில் வாகன இலக்கத்தகடு 36 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இந்த மோட்டார் சைக்கிளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தற்கொலைக் குண்டுதாரி பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களில் ஒன்றே இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal