அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நகருக்கு சென்று விட்டு கச்சாய் வீதி வழியாக மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வேளை கச்சாய் வீதி , தம்புத்தோட்டம் படை முகாமில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்ற இனம் தெரியாத குழுவொன்று இளைஞனை வழிமறித்து சரமாரியாக தாக்கி , வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
Eelamurasu Australia Online News Portal